/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆடிப்பெருக்கையொட்டி கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு
/
ஆடிப்பெருக்கையொட்டி கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு
ஆடிப்பெருக்கையொட்டி கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு
ஆடிப்பெருக்கையொட்டி கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு
ADDED : ஆக 01, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி, ஆடிப்பெருக்கையொட்டி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் நீரின் அளவைப் பொருத்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. அதன்படி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 437 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 400 கன அடியாக சரிந்தது.
ஆனால் நேற்று முன்தினம், 686 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று, 771 கன அடியாக திறக்கப்பட்டிருந்தது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.05 அடியாக நீர்மட்டம் இருந்தது. அதிகளவில் தண்ணீர் திறப்பு குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். தென்பெண்ணை ஆற்றில் கடந்த வாரம் வரை தண்ணீர் குறைவாக சென்ற நிலையில் கடந்த, 2 நாட்களாக கே.ஆர்.பி., அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறப்பால், பெண்ணேஸ்வர மடம், நெடுங்கல், அகரம், மஞ்சமேடு, தர்மபுரி மாவட்டம் இருமத்துார் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராடும் வகையில், அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிரமமின்றி புனித நீராடலாம்' என்றனர்.

