/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணையிலிருந்து ரசாயன நுரையுடன் வெளியேறிய நீர்
/
கெலவரப்பள்ளி அணையிலிருந்து ரசாயன நுரையுடன் வெளியேறிய நீர்
கெலவரப்பள்ளி அணையிலிருந்து ரசாயன நுரையுடன் வெளியேறிய நீர்
கெலவரப்பள்ளி அணையிலிருந்து ரசாயன நுரையுடன் வெளியேறிய நீர்
ADDED : அக் 24, 2025 12:56 AM
ஓசூர், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,126 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால், நேற்று காலை நீர்வரத்து, 1,371 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,201 கன அடி நீர் திறக்கப்பட்டது.
ஆற்றங்கரையோரத்திலுள்ள கெலவரப்பள்ளி, முத்தாலி, மோரனப்பள்ளி, பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி, ஆலுார், நல்லகானகொத்தப்பள்ளி, உலகம், வெங்கடேசபுரம், காமன்தொட்டி, அட்டகுறுக்கி, பாத்தகோட்டா ஆகிய, 12 கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. தென்பெண்ணை ஆற்றில் நேற்றும், ரசாயன நுரையுடன் நீர் பெருக்கெடுத்து ஓடியது.