/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் வேல்முருகன் கோவிலில் துவங்கிய கந்த சஷ்டி விழா
/
ஓசூர் வேல்முருகன் கோவிலில் துவங்கிய கந்த சஷ்டி விழா
ஓசூர் வேல்முருகன் கோவிலில் துவங்கிய கந்த சஷ்டி விழா
ஓசூர் வேல்முருகன் கோவிலில் துவங்கிய கந்த சஷ்டி விழா
ADDED : அக் 24, 2025 12:56 AM
ஓசூர், ஓசூர், வேல்முருகன் கோவிலில் துவங்கிய கந்த சஷ்டி விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாதம், விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்து, சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்த உற்சவத்தை கந்த சஷ்டி பெருவிழாவாக, முருகப்பெருமானின் கோவில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள வேல்முருகன் கோவிலில், மகா கந்த சஷ்டி பெருவிழா உற்சவம் நேற்று துவங்கியது. மூலவர் வேல்முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தன. சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வேல்முருகனுக்கு மங்கள ஆரத்தியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகனை தரிசித்தனர்.
நேற்று துவங்கிய இந்த உற்சவமானது, ஐந்து நாட்கள் நடக்கிறது. 26ல், முருகப்பெருமான், தாயார் சக்தி தேவியிடமிருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி, 27ல் சூரனை வதம் செய்தல், 28ல், முருகப்பெருமான் திருவீதி உலா நிகழ்ச்சி, திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைகிறது.

