/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர் வரத்து
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர் வரத்து
ADDED : மே 08, 2024 05:11 AM
ஓசூர் : அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகா மாநிலத்தில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் அணை நீர்வரத்து, ௧௦௦ கன அடியில் இருந்து, 208 கன அடியாக நேற்று காலை அதிகரித்தது. தென்பெண்ணை ஆற்றில், 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணை மொத்த உயரமான, 44.28 அடியில், 27.55 அடிக்கு தற்போது தண்ணீர் உள்ளது.
ஓசூர் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலுார், பேரிகை, சூளகிரி, மதகொண்டப்பள்ளியில் பசுமை குடில் சேதமாகி, விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையின்றி, கடும் வெப்பத்தால், கே.ஆர்.பி., அணை நீர் இருப்பு வேகமாக சரிந்தது. நடப்பாண்டில் மழையின்றி மூன்றாவது முறையாக கடந்த மார்ச், 31 முதல் நேற்று முன்தினம் வரை, 37 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை மற்றும் அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், 12 கன அடி நீர் நேற்ற வரத்தானது. அணை மொத்த உயரமான, 52 அடியில், 38.40 அடிக்கு தற்போது தண்ணீர் உள்ளது.

