/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
/
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
ADDED : நவ 13, 2024 07:45 AM
ஓசூர்: ஓசூரில், ஒகேனக்கல் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள சிறிய உடைப்பால், தினமும் காவிரி தண்ணீர் வீணாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், ரயில்வே பாலத்தையொட்டிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில், கடந்த ஏப்., மாதம் உடைப்பு ஏற்பட்டது. அதனால், ஓசூர் உழவர் சந்தை முன்புள்ள சாலையை தோண்டி, அதன் அடியிலுள்ள ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் வழியாக, மாற்று பாதையில் குடிநீர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்காக தோண்டப்பட்ட குழி, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் தான், ஜல்லி கொட்டி தார் ஊற்றி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலை பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்ட இடத்தில், தற்போது ஒனேக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக காவிரி தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது.
ஓசூர் மாநகராட்சியின், 45 வார்டுகளில், 15 வார்டுகளுக்கு மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்ய முடிகிறது. கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், ஓசூர் பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் வீணாகி வருகிறது. உடைப்பு சிறிய அளவில் உள்ளது. அது பெரிய அளவிலான உடைப்பாக மாறும் முன், குடிநீர் வடிகால் வாரியம் சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.