/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காலபைரவர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
/
காலபைரவர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED : நவ 21, 2024 01:16 AM
கிருஷ்ணகிரி, நவ. 21-
கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், காலபைரவாஷ்டமி பெருவிழா கடந்த, 15 முதல் வரும், 25 வரை நடக்கிறது. கடந்த, 16 காலை, ஐங்கரன் வேள்ளி மற்றும் கொடி ஏற்றமும் நடந்தது. 17 காலை, திருமுறை தீந்தமிழ் வேள்வியும், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு, பெரிய புராண பாராயணம் ஆகியவை நடந்தது. 18 காலை, முருகன் கோவில் கும்பாபிஷேகமும், மாலை திருவீதி உலாவும் நடந்தது. 19 காலை, சொர்ணாகர்ஷண பைரவர் வேள்வியும், பைரவர் திருவீதி உலாவும், இரவு, திருமுறை இன்னிசை கச்சேரியும் நடந்தது.
நேற்று காலை, திருமுறை தீந்தமிழ் வேள்வியும், பைரவ நாதருக்கும், திரிபுர பைரவி அம்மைக்கும், பைரவ சுவாமிகள் தலைமையில் திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சீர்வரிசைகளுடன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் அம்மை, அப்பன் அருள் பாலித்தனர். பகல், 12:00 மணிக்கு, கோவை திருப்பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் விழா மலரை வெளியிட, சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, அசோக் லேலண்ட் தேன்மொழி வெங்கடேசன் ஆகியோர் விழா மலரை பெற்றுக் கொண்டனர். மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாணம் முடிந்து, அம்மை அப்பன் நகர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

