/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவிரி துலா தீர்த்த ரத யாத்திரைக்கு ஓசூரில் வரவேற்பு
/
காவிரி துலா தீர்த்த ரத யாத்திரைக்கு ஓசூரில் வரவேற்பு
காவிரி துலா தீர்த்த ரத யாத்திரைக்கு ஓசூரில் வரவேற்பு
காவிரி துலா தீர்த்த ரத யாத்திரைக்கு ஓசூரில் வரவேற்பு
ADDED : அக் 28, 2025 01:58 AM
ஓசூர், நீர்நிலைகளை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும், அதை வணங்க வேண்டும், மேலும் குப்பை கொட்டாமல் பாதுகாக்க வலியுறுத்தி, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், 15ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நடக்கிறது. கர்நாடகா மாநிலம், தலைகாவிரி
யில் இருந்து கடந்த, 24ம் தேதி புறப்பட்ட யாத்திரை, நவ., 16ம் தேதி, பூம்புகாரில்
நிறைவு பெறுகிறது.
தமிழக எல்லையான ஓசூருக்கு நேற்று வந்த காவிரி ரதத்திற்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் தாம்பிராஸ் சார்பில், மாவட்ட தலைவர் சுதா நாகராஜன், நீர்நிலை பாதுகாப்பு இயக்க துணைத்தலை
வர் ஒய்.வி.எஸ்., ரெட்டி, அரிமா சங்க நிர்வாகி சந்திராரெட்டி, ஓசூர் மக்கள் சங்க முன்னாள் தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை, 4:30 மணிக்கு, ஓசூர் எம்.ஜி., ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் அருகே இருந்து புறப்பட்டு, ராமநாயக்கன் ஏரிக்கு காவிரி ரதம் ஊர்வலமாக செல்கிறது. அங்கு மாலை, 6:00 மணிக்கு, அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துணைத்தலைவர் சுவாமி ராமானாந்தா தலைமையில் கங்கா ஆரத்தி நடக்கிறது. இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க இருப்பதால், போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

