/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ரூ.50 லட்சத்தில் நல உதவிகள்
/
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ரூ.50 லட்சத்தில் நல உதவிகள்
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ரூ.50 லட்சத்தில் நல உதவிகள்
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ரூ.50 லட்சத்தில் நல உதவிகள்
ADDED : நவ 26, 2024 01:42 AM
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில்
ரூ.50 லட்சத்தில் நல உதவிகள்
கிருஷ்ணகிரி, நவ. 26-
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி பிறந்த நாள் விழா நாளை, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் கொண்டாடப்படுகிறது. கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொறுப்பாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் சார்பாக நாளை முதல் ஒரு மாதத்திற்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட, தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றி, 4,800 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்படுகிறது.
டிச., 5ல், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூரில், 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார். கிருஷ்ணகிரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அனைத்து நகர, ஒன்றிய, பேரூரில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம்கள், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள், விளையாட்டு, பேச்சு, கவிதை ஒப்புவித்தல், போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.