/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜெயலலிதா பிறந்தநாளில் நலத்திட்ட உதவி
/
ஜெயலலிதா பிறந்தநாளில் நலத்திட்ட உதவி
ADDED : பிப் 23, 2024 04:22 AM
கிருஷ்ணகிரி: ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 76வது பிறந்தநாள் வரும், 24ல் (நாளை) கொண்டாடப்படுகிறது. அந்தநாளில், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் சக்திகேற்ப ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். அவருடைய பிறந்த நாளில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் கண் தானம், ரத்த தானம், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதை, கட்டுரை, விளையாட்டு போட்டிகளை நடத்துதல், மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும். இந்த நிகழ்வுகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.