/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணம் மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள்
/
காவேரிப்பட்டணம் மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள்
காவேரிப்பட்டணம் மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள்
காவேரிப்பட்டணம் மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : நவ 15, 2024 02:24 AM
காவேரிப்பட்டணம் மாணவியர்
விடுதிக்கு நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி, நவ. 15-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சந்தைப்பேட்டையில், அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, 55 மாணவியர் தங்கியுள்ளனர். இங்குள்ள கட்டடங்களுக்கு இடையே மேற்புறம் காலியாக இருப்பதால், அதன்வழியே குரங்குகள் விடுதிக்குள் புகுந்து, நாசம் செய்து வந்தன. மேலும், விடுதியில் தட்டு, டம்ளர் உள்ளிட்ட பாத்திரங்கள் குறைவாக இருப்பதாகவும், விடுதியை சுற்றிலும் புதர்கள் மண்டியிருப்பதாகவும் டவுன் பஞ்., நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார், தன் சொந்த நிதி, 20,000 ரூபாயில் விடுதி கட்டடங்கள் மேற்புறம், குரங்குகள் புகாவண்ணம் வலைகள் அமைத்தும், விடுதிக்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் விடுதியை சுற்றிலும் பொக்லைன் மூலம், புதர்களை அகற்றியும் நடவடிக்கை எடுத்தார். அவருக்கு, மாணவியர் நன்றி தெரிவித்தனர்.
மாவட்ட, தி.மு.க., அமைப்பு சாரா ஓட்டூர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார், டவுன் பஞ்., கவுன்சிலர்கள் அமுதா பழனி, தமிழ்ச்செல்வி சோபன் பாபு, கிளைச்செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.