/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.2.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.2.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : நவ 11, 2025 02:12 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 379 மனுக்கள் வழங்கினர்.
கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தெரிவிக்க, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில், 17 பயனாளிகளுக்கு, 2.26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

