/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4.43 லட்சம் மதிப்பில் 16 பேருக்கு நலத்திட்ட உதவி
/
ரூ.4.43 லட்சம் மதிப்பில் 16 பேருக்கு நலத்திட்ட உதவி
ரூ.4.43 லட்சம் மதிப்பில் 16 பேருக்கு நலத்திட்ட உதவி
ரூ.4.43 லட்சம் மதிப்பில் 16 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 03, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 349 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 பேருக்கு, 98,100 ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்பேசிகள், 3 பேருக்கு, 9,000 ரூபாய் மதிப்பில், காதொலி கருவிகள், 7 பேருக்கு, 3.35 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை கால்கள் என மொத்தம், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு, 4.43 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.