/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ-.8.91 கோடியில் நலத்திட்ட பணி
/
ரூ-.8.91 கோடியில் நலத்திட்ட பணி
ADDED : அக் 15, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒன்றியம், மூன்றம்பட்டி பஞ்.,ல் 8.91 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள், 8 புதிய முழுநேர ரேஷன் கடைகள் மற்றும் ஊத்தங்கரை பேரூராட்சியில், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் மல்லிதுாள் அரவை ஆலை செயல்பாடுகளை, அமைச்சர்கள் சக்கரபாணி, நாசர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி எம்.பி., கோபிநாத், மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு குமரேசன், மத்திய எக்கூர் செல்வம், தெற்கு ரஜினிசெல்வம், நகர செயலாளர் பார்த்திபன் மற்றும் கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.