/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
/
மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
ADDED : நவ 30, 2024 02:05 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி அருகே, குந்தாரப்பள்ளியில் மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் முருகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசு-கையில்,'' டிச., 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு, கட்சி கொடிகள், தோர-ணங்கள் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். வரும் சட்-ட சபை தேர்தலுக்கான பணிகளை, இப்போது இருந்தே துவங்கி செய்ய வேண்டும்,'' என, நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், இளைஞரணி மாநில துணை செயலர் சீனிவாசன், பகுதி செயலர்கள் ராமு, திம்மராஜ், தலைமை செயற்-குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.