/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை
ADDED : மே 08, 2024 05:10 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதங்களாக கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது.
பகலில் மட்டுமின்றி இரவிலும் வெப்பக்காற்று வீசுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். கடந்த, 2 முதல், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் துவங்கியது. சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் கடந்த, 2 நாட்களாக வெப்பம் சற்று தணிந்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நெடுங்கல்லில், 47.2 மி.மீ., மழை பதிவாகியது. அதேபோல், பாரூர், 46.4, கே.ஆர்.பி., அணை, 33.6, கிருஷ்ணகிரி, 32, கெலவரப்பள்ளி, 30.04, போச்சம்பள்ளி, 20.4, பாம்பாறு அணை, 19, ஊத்தங்கரை, 15, பெனுகொண்டாபுரம், 12.4, தேன்கனிக்கோட்டை, 8, அஞ்செட்டி, 4.2, சூளகிரி, 4, ஓசூர், 2.3, சின்னாறு அணை, 2 என மொத்தம், 276.54 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

