/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 18, 2025 01:26 AM
கிருஷ்ணகிரி, மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கெலவரப்பள்ளியில் அதிகபட்சமாக, 20 மி.மீ., மழை பதிவானது. அதேபோல், கிருஷ்ணகிரி, 16.40 மி.மீ., தேன்கனிக்கோட்டை, தளி தலா, 5, ராயக்கோட்டை, 3, ஓசூர், 2, கே.ஆர்.பி., அணை, 1.20, சூளகிரி, 1 மி.மீ., என மொத்தம், 53.60 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 267 கன அடி நீர் வந்த நிலையில் நேற்று, 387 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையிலிருந்து கால்வாயில், 132 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 255 கன அடி என மொத்தம், 387 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 50.95 அடியாக நீர்மட்டம் இருந்தது.
பாரூர் பெரிய ஏரியின் மொத்த உயரமான, 15.60 அடிக்கு, தண்ணீர் உள்ளது. ஏரிக்கு, 161 கன அடி நீர்வரத்து உள்ளது. ஏரியிலிருந்து, 102 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்பாறு அணை மொத்த உயரமான, 19.60 அடியில், 5.25 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து, 25 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சூளகிரி சின்னாறு அணை மொத்த உயரமான, 32.80 அடியில், நேற்று, 7.35 அடியாக நீர்மட்டம் இருந்தது.