/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ADDED : செப் 19, 2025 01:04 AM
கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்
வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 7 முதல், 18 வரை மொத்தம், 12 நாட்களில், 9 நாட்கள் மிதமானது முதல் பலத்த மழை பெய்துள்ளது. இதில் மொத்தம், 771.5 மி.மீ., மழை பதிவாகி உள்ளதால் ஏரி, குளம் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 587 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 806 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்களில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 627 கன அடி என மொத்தம், 806 கன அடிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.10 அடியாக இருந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓசூரில், 43 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், கே.ஆர்.பி., அணை, 26.80, நெடுங்கல், 26, போச்சம்பள்ளி, 25.10, தேன்கனிக்கோட்டை, 12, பாரூர், 11.60, அஞ்செட்டி, 10.60, ராயக்கோட்டை, 10, தளி, 10, கெலவரப்பள்ளி அணை, 5.50, பெனுகொண்டாபுரம், 5.20, பாம்பாறு அணை, 5, கிருஷ்ணகிரி, 4.60, ஊத்தங்கரை, 4.20, சின்னாறு அணை, 2, சூளகிரி, 1.50, என மொத்தம், 203.10 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.