/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 07, 2024 03:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பகலில் வெயில் பொதுமக்களை வாட்டி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து, மாலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெய்து வரும் மழையாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பாலும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 459 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 655 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் இடது மற்றும் வலதுபுற வாய்க்கால் மூலம் பாசனத்திற்காக, 178 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த
உயரமான, 52 அடியில், நேற்று, 48.85 அடியாக நீர்மட்டம் இருந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பாறு அணையில், 48 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், கிருஷ்ணகிரி, 47.60, ஊத்தங்கரை, 42.60, தேன்கனிக்கோட்டை, 31, தளி, 25,
நெடுங்கல், 24, ராயக்கோட்டை, 17, போச்சம்பள்ளி, 14, ஓசூர், 11.60, அஞ்செட்டி, 10.60, கே.ஆர்.பி., அணை மற்றும் பெனுகொண்டாபுரம் தலா, 10.20, கெலவரப்பள்ளி அணை, 9, பாரூர், 7, சூளகிரி, 6, சின்னாறு அணை, 5 என
மொத்தம், 318.80 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.