/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து
/
மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து
மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து
மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து
ADDED : மே 14, 2025 01:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
இதனால், நகரின் பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதுப்பேட்டை பெங்களூரு சாலையில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று மாலை, 5:00 மணிக்கு, கிருஷ்ணகிரி நகரில் அரை மணி நேரம் மழை பெய்தது. மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு சீரான நீர்வரத்து உள்ளது.
அணைக்கு நேற்று காலை, 251 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து கடந்த, 3 நாட்களாக தலா, 358 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.60 அடியாக இருந்தது.