/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பரவலான மழையால் கே.ஆர்.பி., அணைக்கு அதிக நீர்வரத்து
/
பரவலான மழையால் கே.ஆர்.பி., அணைக்கு அதிக நீர்வரத்து
பரவலான மழையால் கே.ஆர்.பி., அணைக்கு அதிக நீர்வரத்து
பரவலான மழையால் கே.ஆர்.பி., அணைக்கு அதிக நீர்வரத்து
ADDED : ஆக 07, 2024 06:42 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 396 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 621 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து, இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில், முதல்போக சாகுபடிக்கு, 185 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.55 அடியாக இருந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில், 73.7 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், ஓசூர் கெலவரப்பள்ளி, 53, கே.ஆர்.பி., அணை, 37, ஊத்தங்கரை, 30, பாம்பாறு அணை, 29, ஓசூர், 14.80, பெனுகொண்டாபுரம், 7.20, போச்சம்பள்ளி, 5.20, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, 5, நெடுங்கல், 4.80, சின்னாறு அணை, 4, பாரூர், 3.40, அஞ்செட்டி, 2.40, சூளகிரி, 2 என மொத்தம், 276.50 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.