நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தாலுகா கொல்லால் நாயக்கனுாரை சேர்ந்தவர் குப்புசாமி, 65, விவசாயி. இவரது மனைவி சின்னபாப்பா, 60. இவர்கள் நேற்று முன்தினம் மதியம் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளனர்.
கொல்ல நாயக்கனுார் அருகே திருப்பத்துார் - ஊத்தங்கரை சாலையில் சென்றபோது, எதிரில் வேகமாக வந்த ஸ்பிளண்டர் பைக் மோதியது. இதில் மொபட்டில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், கணவர் குப்புசாமி கண்ணெதிரே, சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். குப்புசாமி படுகாயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

