ADDED : செப் 03, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா, புகழூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட தம்பதியர் மாலைகளை மாற்றிக் கொண்டு, ஒருவர் மேல் ஒருவர் கை வைத்து கொண்டு, கண்களை மூடி காந்த பரிமாற்ற தவம் புரிந்தனர்.
பிறகு, கணவன்-மனைவி உறவுகள் குறித்து, பலர் விளக்கம் அளித்து பேசினர். நிகழ்ச்சியில், புகழூர் காகித ஆலை முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) ராஜலிங்கம்-சாந்தி தம்பதி, பேராசிரியர் துரைசாமி-வளர்மதி தம்பதியர் உள்பட பலர் பங்கேற்றனர்.