sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதைக்கு ரூ.2,200 கோடி மதிப்பீடு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிதி ஒதுக்குமா

/

ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதைக்கு ரூ.2,200 கோடி மதிப்பீடு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிதி ஒதுக்குமா

ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதைக்கு ரூ.2,200 கோடி மதிப்பீடு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிதி ஒதுக்குமா

ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதைக்கு ரூ.2,200 கோடி மதிப்பீடு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிதி ஒதுக்குமா


ADDED : அக் 19, 2024 01:24 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதைக்கு ரூ.2,200 கோடி மதிப்பீடு

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிதி ஒதுக்குமா

ஓசூர், அக். 19-

ஓசூர் - கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை இடையே ரயில் பாதை அமைக்க, 2,200 கோடி ரூபாய் அளவிற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதால், மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் திருப்பத்துாரில் இருந்து, பர்கூர் வழியாக கிருஷ்ணகிரிக்கு ரயில் போக்குவரத்து இருந்தது. இந்த வழித்தடத்தில் மொத்தம், 5 ரயில்வே ஸ்டேஷன்கள் இருந்தன. 1905 முதல், 1941 வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அதன் பின் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், 1942ல், ரயில்பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நாட்டிலேயே ரயில் சேவை இல்லாத ஒரே மாவட்ட தலைநகராக கிருஷ்ணகிரி மட்டும் உள்ளது.

ஓசூரில் ரயில் சேவை இருந்த போதும், சென்னைக்கு செல்ல வேண்டுமானால், தர்மபுரி மாவட்டம் மெரப்பூர் அல்லது சேலம் அல்லது பெங்களூரு சென்று, அங்கிருந்து செல்ல முடியும். இது கால விரயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் வரை ரயில் வழித்

தடத்தை ஏற்படுத்தினால், சென்னைக்கு மக்கள் ரயில் சேவையை பயன்படுத்த முடியும். எனவே, ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை மொத்தம், 11 முறை சர்வே பணி செய்யப்பட்டு, இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என, மத்திய அரசும் கையை விரித்தது.

தொழில் கேந்திரமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, ஆட்டோமொபைல் சார்ந்த உதிரிபாகங்கள், கிரானைட், மா, புளி மற்றும் காய்கறி போன்றவற்றை, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப லாரி போக்குவரத்தை மட்டுமே விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

கிருஷ்ணகிரி முன்னாள் காங்., -- எம்.பி., செல்லக்குமார், பா.ஜ., முன்னாள் எம்.பி., நரசிம்மன் போன்றோர், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சரை பலமுறை சந்தித்து பேசி, இத்திட்டத்திற்கு மீண்டும் சர்வே செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய கதி சக்தி திட்டத்தில், 2.47 கோடி ரூபாயை ஒதுக்கியது. கடந்த, 2022 அக்.,

25 ல், திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகி திடீரென நிறுத்தப்பட்டது.

அதன் பின் நவ., 4 ல், மீண்டும் டெண்டர் விடப்பட்டு, நவ., 28 ல் தகுதியான, 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் கடந்தாண்டு ஜன., 2 ல், திட்ட மதிப்பீடு தயார் செய்ய தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம் சர்வே வரைபடங்களுடன் திட்டத்திற்கான இறுதி மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டது. பைனல் லொக்கேசன் சர்வே மற்றும் திட்ட மதிப்பீட்டு பணிகள் முடிந்து விட்ட நிலையில், திட்டத்தை செயல்படுத்த, 2,200 கோடி ரூபாய் செலவாகும் என திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட மதிப்பீட்டை திட்ட கமிஷனுக்கு அனுப்பி, அங்கிருந்து நிதி ஆயுக், கேபினட் கமிட்டிக்கு சென்று, பிரதமர் அலுவலகம் தான் இறுதி முடிவை எடுக்கும்.

கடந்தாண்டு நவ., மாதம் ஓசூர் வந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில்பாதை திட்டத்தில் நீண்ட துாரம் சுரங்கம் வருவதால், அதன் செலவு அதிகமாக இருக்கிறது. அதை குறைக்க தீர்வு கண்டு வருகிறோம். 15 நாட்களுக்கு ஒருமுறை இத்திட்டம் குறித்து கண்காணிக்க போகிறேன். இத்திட்டத்தில் செலவு குறைக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும். கண்டிப்பாக இத்திட்டம் வரும்' என தெரிவித்தார்.

அதனால் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். அதற்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது நிதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு மனது வைத்தால் மட்டுமே இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கும் என்ற நிலை உள்ளது. ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில்பாதை திட்டத்தில், 101 கி.மீ., துாரத்தை, 98 கி.மீ., ஆக குறைக்கவும், 7.75 கி.மீ., குகை பாதையை, 0.75 கி.மீ., குறைக்கவும், மத்திய ரயில்வேத்துறைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில்பாதை திட்டம் கொண்டு வரப்பட்டால், ஜோலார்பேட்டை - குப்பம் - பெங்களூரு ரயில் மார்க்கத்தில் கூட்டம் அதிகரித்தாலோ அல்லது இயற்கை சீற்றங்களால் விபத்து ஏற்பட்டாலோ, இந்த ரயில் பாதையை பயன்படுத்த முடியும்.






      Dinamalar
      Follow us