/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் தமிழக எல்லை நகரம் 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க அரசு முயற்சிக்குமா?
/
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் தமிழக எல்லை நகரம் 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க அரசு முயற்சிக்குமா?
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் தமிழக எல்லை நகரம் 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க அரசு முயற்சிக்குமா?
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் தமிழக எல்லை நகரம் 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க அரசு முயற்சிக்குமா?
ADDED : டிச 26, 2024 03:07 AM
ஓசூர்: ஓசூரில் போக்குவரத்து நெரிசல் தீவிரமாக உள்ள நிலையில், மத்-திகிரி மற்றும் அந்திவாடி கூட்ரோடுகள், தேன்கனிக்கோட்டை ஆர்.சி., தேவாலயம், அசோக் பில்லர், தளி ரயில்வே கேட் என, 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்-டுள்ளது. அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக எல்லையான ஓசூர் நகரம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், வேகமாக வளர்ந்து வருகிறது. நகர் பகுதியில் மட்டும், 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதுத-விர மருத்துவம், வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைக-ளுக்காக தினமும் கிராமப்புறங்களில் இருந்து ஓசூருக்கு பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில், ஓசூர் பகுதியில் சாலை வசதிகள் இல்லை. இதனால் நகர் பகுதியில் உள்ள பழைய பெங்களூரு சாலை, தாலுகா அலுவலக சாலை, பாகலுார் சாலை, தேன்கனிக்-கோட்டை சாலை, ராயக்கோட்டை சாலை, தளி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போலீசார் அமைத்துள்ள போக்குவரத்து சிக்னல்களும் இயங்குவதில்லை. தற்போது தளி சாலை, மத்திகிரி கூட்ரோடு - பேலகொண்டப்-பள்ளி சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன. ஓசூர் இன்னர் ரிங்ரோடு, ராயக்கோட்டை சாலை போன்றவை விரிவாக்கம் செய்-யப்பட்டுள்ளன. அதனால், இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஓசூரில் உள்ள தளி சாலை ரயில்வே கேட் பகுதியில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை தயாராக இருந்தும், ரயில்வேத்துறை ஒத்து-ழைக்காததால், பாலம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.ரிங்ரோட்டில் உள்ள பவானி பேலஸ் திருமண மண்டபத்தில் இருந்து, தனியார் கூரியர் நிறுவனம் வரை, உயர்மட்டம் பாலம் அமைக்க மாநில அரசிற்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை செய்தும் நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால் ஓசூர் - தேன்கனிக்-கோட்டை சாலையில் ரிங்ரோடு சந்திக்கும் ஆர்.சி., தேவாலயம் அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல், ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் ரிங்ரோடு சந்திக்கும் அசோக் பில்லர் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, மத்திகிரி கூட்ரோடு, அந்திவாடி கூட்ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், நான்கு மூலைகளில் இருந்து அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. ஓசூர் இன்னும் ஓரிரு ஆண்டுகளில், 5 லட்சத்திற்கும் மேற்-பட்டோர் வசிக்கும் பகுதியாக மாறி விடும். மேலும், 9 பஞ்.,க்கள் மாநகராட்சியுடன் இணைய உள்ளன. அதனால், ஓசூர் நகரில் முக்-கிய சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க வேண்டியது கட்டாய-மாக ஏற்பட்டுள்ளது. அதற்கு, தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஓசூர் நகரம் கடும் போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் நிலை உருவாகும்.