/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெடுங்கல் அணை மதகு மேல் பகுதியில் இரும்பு தடுப்பு சேதம் சரிசெய்யப்படுமா?

ADDED : மே 22, 2024 06:49 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி. அணையிலிருந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நெடுங்கல் பகுதியில், 1887 - 88ல் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து பாரூர் பெரிய ஏரி உட்பட, 20க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். அதேபோல் தடுப்பணையை கடந்து, தண்ணீர் செல்லாத நிலையில் தடுப்பணையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள, 4 மதகுகள் மூலம், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் செல்ல திறந்து விடப்படும்.
நெடுங்கல் அணைக்கு, சுற்று வட்டார கிராம மக்கள் குளிக்கவும், அணையை பார்த்து ரசிக்கவும், ஈம சடங்கு செய்வதற்காகவும் நாள்தோறும், 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தடுப்பணை ஒட்டி மதகு அமைந்துள்ள இடத்தின் மேல்பகுதியின் இருபுறங்களிலும், 40 அடி நீளத்திற்கு, 3 அடி உயரத்திற்கு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதின் வலதுபுறமுள்ள தடுப்பு சேதமாகி தனியாக தொங்கியவாறு உள்ளது. அங்கு வரும் பொதுமக்கள் இதையறியாமல் தடுப்பு மீது சாய்ந்து அணையை பார்வையிட்டால், 15 அடி ஆழ ஆற்றில் விழ நேரிடும் அபாயம் உள்ளது. ஏதேனும், அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதமான இரும்பு தடுப்புவேலியை சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது.