/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுமா? ஆம்பள்ளி கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : நவ 01, 2024 01:17 AM
போச்சம்பள்ளி, நவ. 1-
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் முதலுதவி சிகிச்சை மற்றும் அவசர தேவைக்கு திருப்பத்துார், கிருஷ்ணகிரி, பர்கூர், மத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல, கடும் சிரமப்பட்டு வந்தனர்.
அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை, 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட, அனுமதி அளித்த நிலையில், கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு, சுகாதார நிலையத்தின் கட்டடம் முழு பணியும் முடிந்து விட்டது. ஆனால், தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட துணை சுகாதார துறை அலுவலர் ரமேஷ்குமாரிடம் கேட்டதற்கு, ''கட்டட பணி முழுவதும் முடிந்து விட்டது. அரசு நிதி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட கட்டடம் என்பதால், முதல்வரின் உத்தரவை எதிர்பார்த்துள்ளோம்,'' என்றார்.