/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அறுவடை செய்த ராகி மழையால் முளைவிடும் அவலம் முன்கூட்டி திறக்கப்படுமா கொள்முதல் நிலையங்கள்
/
அறுவடை செய்த ராகி மழையால் முளைவிடும் அவலம் முன்கூட்டி திறக்கப்படுமா கொள்முதல் நிலையங்கள்
அறுவடை செய்த ராகி மழையால் முளைவிடும் அவலம் முன்கூட்டி திறக்கப்படுமா கொள்முதல் நிலையங்கள்
அறுவடை செய்த ராகி மழையால் முளைவிடும் அவலம் முன்கூட்டி திறக்கப்படுமா கொள்முதல் நிலையங்கள்
ADDED : டிச 17, 2024 07:32 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் மழையால் ராகி முளைத்து வரும் நிலையில், கொள்முதல் நிலையங்களை, அரசு முன்கூட்டியே திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆக., மாத பருவமழையின் போது, தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரியில் அதிகளவில் ராகி சாகுபடி நடக்கிறது. நவ., டிச., மாதங்களில் ராகியை விவசாயிகள் அறுவடை செய்து, களத்திலேயே உலர்த்தி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாதம் ஒரு குடும்பத்திற்கு, 2 கிலோ ராகி வழங்கப்படும் என, தமிழக
அரசு அறிவித்துள்ளது. அதற்காக, சூளகிரியில் சாமனப்பள்ளி, செட்டிப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், தளி பகுதிகளில்,
விவசாயிகளிடமிருந்து மாவட்ட நிர்வாகம் மூலம் நேரடி ராகி கொள்முதல் நடக்கிறது. கடந்தாண்டு ஒரு கிலோ ராகி, 38.46
ரூபாய்க்கு அரசு வாங்கியது. இந்தாண்டு, 40,000 ஹெக்டேருக்கு மேல் ராகி சாகுபடி செய்து, தற்போது அறுவடை செய்து உலர
வைத்துள்ளனர். பெஞ்சல் புயலால் பெய்த தொடர் மழையில், தேன்கனிக்கோட்டையில், 2,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி
செய்திருந்த ராகி முளைக்க துவங்கி, விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஓரிரு
நாட்கள் மழை பெய்தாலே, ஓசூர், சூளகிரியிலுள்ள ராகி பயிர்களில் முளை விடும் அபாயம் உள்ளது.இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், 'கடந்தாண்டு டிச.,ல் அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்த கொள்முதல் நிலையத்தில்,
ராகி கொள்முதல் நடந்தது. நடப்பாண்டு பெய்த மழையால் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ராகி முளைக்க துவங்கியுள்ளது. ஒரு
ஹெக்டேருக்கு. 2.50 டன் வரை ராகியை அறுவடை செய்வோம். மழையால், 1.50 முதல், 2 டன் ராகி கிடைத்தாலோ பெரிய விஷயம்.
ஜன., இறுதியில் ராகியை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிகிறது. அதுவரை காலதாமதம் செய்தால், ராகி
முளைத்து வீணாகி விடும். எனவே உடனடியாக, ராகி கொள்முதலை முன்கூட்டியே அரசு துவங்க வேண்டும்' என்றனர்.

