/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் துணை நகர் அமைக்க தமிழக அரசு முயற்சிக்குமா
/
ஓசூரில் துணை நகர் அமைக்க தமிழக அரசு முயற்சிக்குமா
ADDED : மே 12, 2025 02:28 AM
ஓசூர்: ஓசூர் நகரில், 3.50 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், மக்கள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், ஓசூரை-யொட்டி ஒரு துணை நகரம் அமைக்க வேண்டும் என்ற எதிர்-பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக எல்லை நகரான ஓசூர், வேகமாக வளர்ந்து வரும் நகரங்-களில், 13 வது இடத்தில் உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ற சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை கட்டமைப்பு இல்லை.
ஓசூர் நகரில் மட்டும், 3.50 லட்சம் மக்களுக்கு மேல் வாழ்கின்-றனர். தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன வேலைக்காக, வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மக்கள் ஓசூரில் குடி-யேறி, நகர் பகுதியிலேயே வீடுகளை சொந்தமாக வாங்கியும், வாடகைக்கும் குடியிருக்கின்றனர்.
ஓசூர் வளர்ச்சியால் அருகில் உள்ள சூளகிரி, தேன்கனிக்-கோட்டை தாலுகாக்கள் வளர்ச்சியடைந்த போதும், அங்கு சென்று குடியேற மக்கள் தயங்குகின்றனர். ஏனெனில், தொழிற்சா-லைகள், தனியார் நிறுவனங்களுக்கு சென்று வருவது சிரமம் மற்றும் குழந்தைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைப்பது கடினம். அவ்வாறு குடியேறினாலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவம் போன்ற பல்வேறு தேவைகளுக்கும், ஓசூரை தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
அதனால் தான், ஓசூர் நகருக்குள் மக்கள் குடியேற விரும்புகின்-றனர். அதை பயன்படுத்தி பெங்களூரு நகருக்கு இணையாக, ஓசூரில் வீடுகள் அதிக வாடகைக்கு விடப்படுகின்றன. ஓசூர் என்ற ஒரு இரண்டாம் தர சிறிய நகரத்திற்குள் இன்று, 3.50 லட்சம் மக்களுக்கு மேல் உள்ளனர்.
அவர்கள் காய்கறி, பழங்கள், உணவு பொருட்கள் வாங்கவும், பிற அத்தியாவசிய தேவைகள் மற்றும் வேலைக்கு தினமும் வாகனங்-களில் செல்வதால், ஓசூர் நகரில் உள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசலில் தவிக்கிறது. ஓசூர் டவுன் பஞ்.,தாக இருந்த போது போடப்பட்ட குறுகிய சாலையில் தான், மாநகராட்சியான பின்பும் கூட வாகனங்கள் செல்கின்றன.
நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், மக்கள் திக்குமுக்காட வேண்டியுள்ளது. எனவே, ஓசூர் நகரையொட்டி பொதுமக்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு,
பூங்காக்கள், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து, புதிய துணை நகரங்களை அமைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சி-புரம், திருமழிசை, திருவள்ளூர், மீஞ்சூர் ஆகிய இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்தும் முயற்சியை அரசு எடுத்தது போல், ஓசூர் அருகிலும் தொழிலக பகுதிகளை உள்ளடக்கிய-தாக, துணை நகரம் அமைய தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.