/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சிசிடிவி' கேமராக்களை கழற்றி வைத்த மாநகராட்சி பள்ளி ஜன்னல் கண்ணாடி, இருக்கைகள் உடைப்பு
/
'சிசிடிவி' கேமராக்களை கழற்றி வைத்த மாநகராட்சி பள்ளி ஜன்னல் கண்ணாடி, இருக்கைகள் உடைப்பு
'சிசிடிவி' கேமராக்களை கழற்றி வைத்த மாநகராட்சி பள்ளி ஜன்னல் கண்ணாடி, இருக்கைகள் உடைப்பு
'சிசிடிவி' கேமராக்களை கழற்றி வைத்த மாநகராட்சி பள்ளி ஜன்னல் கண்ணாடி, இருக்கைகள் உடைப்பு
ADDED : ஏப் 12, 2025 01:16 AM
'சிசிடிவி' கேமராக்களை கழற்றி வைத்த மாநகராட்சி
பள்ளி ஜன்னல் கண்ணாடி, இருக்கைகள் உடைப்பு
ஓசூர், ஓசூர், மாநகராட்சி பள்ளியின் ஜன்னல் கண்ணாடி, இருக்கைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில் இயங்கி வரும், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 1,230 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்த போது, மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராக்கள் மாநகராட்சி அனுமதியுடன் கழற்றி வைக்கப்பட்டன. புதிய வகுப்பறைகள் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆன போதும், கேமராவை மீண்டும் மாநகராட்சி பொருத்தி கொடுக்கவில்லை.
புதிய வகுப்பறை பகுதியில், இரும்பு கேட் அமைத்து கொடுக்கும் பணி மந்த கதியில் நடக்கிறது. மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை ஒட்டியுள்ள, அங்கன்வாடி மையத்தில் புதிய காம்பவுண்ட் சுவர் அமைத்த ஒப்பந்ததாரர், இரும்பு கேட்டை பூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. அதனால் இரவு நேரங்களில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்குள் மர்ம நபர்கள் நுழைந்து
விடுகின்றனர்.
இரு வாரங்களுக்கு முன், பள்ளியின் ஸ்பீக்கர் ஒயர் மற்றும் மேடையின் மேற்கூரையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் பள்ளி திறக்கப்படவில்லை. நேற்று காலை ஆசிரியர்கள் சென்று பார்த்த போது, பள்ளி தலைமையாசிரியர் அறை மற்றும் முதல் தளத்தில் உள்ள வகுப்பறைகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. அதேபோல், முதல் தளத்தில் உள்ள வகுப்பறையின் பூட்டை உடைத்து, பிளாஸ்டிக் சேர்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
'சிசிடிவி' கேமரா இல்லாததால், மர்ம நபர்கள் யார் என, கண்டறிய முடியவில்லை. மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால், பெற்றோர் அச்சத்தில்
உள்ளனர்.