/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீபாவளி சீட்டு மோசடி ரூ.3 கோடியுடன் பெண் மாயம்
/
தீபாவளி சீட்டு மோசடி ரூ.3 கோடியுடன் பெண் மாயம்
ADDED : நவ 09, 2025 03:11 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பி.செட்டிப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணப்பா மனைவி பத்மா. ஓசூர் அருகே குருபட்டியில் தங்கி, சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளிக்காக குருபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் மாதந்தோறும், 1,500 ரூபாய் வீதம் செலுத்தி வந்தனர். ஒரு சீட்டுக்கு, 2 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி மற்றும் இனிப்பு, காரம், மளிகை பொருட்கள் என மொத்தம், 21 பொருட்கள் வழங்குவதாக பத்மா கூறியிருந்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, 19 பொருட்களை வழங்கி விட்டார். தங்கம், வெள்ளி வழங்கவில்லை. நவ., 5ம் தேதி வழங்குவதாக கூறிய நிலையில், பத்மா மாயமானார்.
அவரிடம் சீட்டு கட்டிய 50க்கும் மேற்பட்டோர், மத்திகிரி ஸ்டேஷனில், பத்மா 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டதாக, நேற்று புகார் மனு கொடுத்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி, போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

