/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஆண்களை விட பெண்களுக்கே மருத்துவம் படிக்க அதிக ஆர்வம்'
/
'ஆண்களை விட பெண்களுக்கே மருத்துவம் படிக்க அதிக ஆர்வம்'
'ஆண்களை விட பெண்களுக்கே மருத்துவம் படிக்க அதிக ஆர்வம்'
'ஆண்களை விட பெண்களுக்கே மருத்துவம் படிக்க அதிக ஆர்வம்'
ADDED : டிச 08, 2025 07:51 AM
ஓசூர்: ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு 'வெள்ளை அங்கி' வழங்கும் விழா நடந்தது. செயலாளர் லாசியா தம்பிதுரை முன்னிலை வகித்தார். நிறுவனர் தம்பிதுரை எம்.பி., செமஸ்டர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பதக்கமும்,
முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு 'வெள்ளை அங்கி'யையும் வழங்கி பேசியதாவது:
டாக்டர், நர்சிங், பிசியோதெரபி, பார்மசி அனைத்தும் சேர்ந்தது தான் மருத்துவம். எம்.பி.பி.எஸ்., முடித்தவுடன், எம்.எஸ்., எம்.டி., படிக்க வேண்டும். மருத்துவம், நர்சிங் படிக்க ஆண்களை விட பெண்கள் அதிகம் விரும்புகின்-றனர். மனித உயிர்களை காப்பாற்றி வாழ வைக்க, டாக்டர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். நாட்டில் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உயர்ந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ராஜா முத்தையா, துணை முதல்வர் ஆனந்தரெட்டி, கண்காணிப்-பாளர் கிரிஸ் ஹோங்கல், இருப்பிட மருத்துவர் பார்வதி, வேளாங்கண்ணி பள்ளிகள் குழும அறங்-காவலர்
கூத்தரசன், அதியமான் கல்வி குழும அறங்காவலர் சுரேஷ், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன், மேலாளர் நாராயணன், எம்.ஜி.ஆர்., கல்லுாரி முதல்வர் முத்துமணி, அண்ணா கலை கல்லுாரி முதல்வர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

