/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டாடா நிறுவன குடியிருப்பு குளியலறையில் கேமரா 3வது நாளாக பெண் தொழிலாளர்கள் போராட்டம்
/
டாடா நிறுவன குடியிருப்பு குளியலறையில் கேமரா 3வது நாளாக பெண் தொழிலாளர்கள் போராட்டம்
டாடா நிறுவன குடியிருப்பு குளியலறையில் கேமரா 3வது நாளாக பெண் தொழிலாளர்கள் போராட்டம்
டாடா நிறுவன குடியிருப்பு குளியலறையில் கேமரா 3வது நாளாக பெண் தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : நவ 07, 2025 02:05 AM
ஓசூர்: ராயக்கோட்டை அருகே, 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பின் குளியறையில், ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில், பெண் தொழிலாளர்கள், மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார், பீஹார் விரைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில், 'ஐபோன்' உதிரி பாகம் தயாரிக்கும், டாடா எ லக்ட்ரானிக்ஸ் நிறுவன ம் இயங்குகிறது.
பெண் ஊழியர்கள்
இங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு, லாலிக்கல் பகுதியில் 'விடியல் ரெசிடன்சி' என்ற பெயரில், நிறுவனத்தின் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகளில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கி உள்ளனர். இதில், 4வது பிளாக், 8வது மாடியிலுள்ள அறை ஒன்றின் குளியலறையில், ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பெண் ஊழியர்கள் கடந்த, 4ம் தேதி மாலை முதல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேமராவை வைத்த அந்நிறுவன பெண் ஊழியர் நீலுகுமாரி குப்தா, 22, என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அந்த கேமரா காட்சி பதிவுகளை , தன் காதலுனுக்கு அவர் அனுப்பியது தெரிந்தது. அவரது பெயர் சந்தோஷ் என கூறப்பட்ட நிலையில், பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், அவரது பெயர் ரவி பிரதாப் சி ங் என்பதும், தன்னை தேடுவதை அறிந்து அவர், பீஹார் மாநிலத்திற்கு தப்பி சென்றதும் தெரிந்தது.
பீஹார் விரைவு
அவரை பிடிக்க, தனிப்படை போலீசார், பீஹார் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று, மூன்றாவது நாளாக நிறுவன குடியிருப்பிலுள்ள பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது பெற்றோரும் அங்கு வந்த நிலையில், அவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும், கேமரா வேறு எங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ளன என்ற விபரமும் தெரியவில்லை என அவர்கள் கூறினர்.
இந்நிலையில் டில்லி, 'லாரா ரிஸ்ஜ் மேனேஜ்மென்ட்' என்ற தனியார் நிறுவனத்திலிருந்து, ஆறு பேர் மற்றும் பெங்களூருவில் இருந்து, நான்கு பேர் உள்பட, 10 பேர் குழுவினர் வந்துள்ளனர்.
இவர்கள், குடியிருப்பு கட்டடத்தில் வேறு எங்கேனும் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சோதனை, இரண்டு நாட்கள் முழுமையாக நடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கேமரா பிரச்னையால் நேற்று முன்தினம், 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், நேற்றும் பலர், தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினர்.
அவர்களை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மற்ற பெண் தொழிலாளர்கள், போக விடாமல் தடுத்ததால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், விடுதி வார்டன்களும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

