/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தையை கொன்ற தாய் மற்றொரு பெண்ணுடன் கைது ஓரின சேர்க்கையால் கொலையா?
/
குழந்தையை கொன்ற தாய் மற்றொரு பெண்ணுடன் கைது ஓரின சேர்க்கையால் கொலையா?
குழந்தையை கொன்ற தாய் மற்றொரு பெண்ணுடன் கைது ஓரின சேர்க்கையால் கொலையா?
குழந்தையை கொன்ற தாய் மற்றொரு பெண்ணுடன் கைது ஓரின சேர்க்கையால் கொலையா?
ADDED : நவ 07, 2025 02:15 AM
ஓசூர்: ஐந்து மாத ஆண் குழந்தையை கொன்ற தாய், மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கை காரணமாக கொலை நடந்ததா என விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 38, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாரதி, 26.
இவர்களுக்கு, 5, 4 வயதில் பெண் குழந்தைகள், 5 மாதத்தில் ஆண் குழந்தையும் இருந்தது.
கடந்த 4ம் தேதி, இவர்களது, 5 மாத ஆண் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி இறந்ததாக கூறி, அடக்கம் செய்தனர்.
குழந்தையை இழந்த சோகமின்றி, மனைவி பாரதி, அடிக்கடி போனில் பேசியவாறு இருந்தார். இதை கவனித்த கணவர் சுரேஷ், அவர் மனைவியின் மொபைல் போனை, அவருக்கு தெரியாமல் எடுத்து பார்த்தார்.
அதில், பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா, 20, என்பவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த போட்டோ, வீடியோ இருந்தது. அதிர்ச்சியடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் அளித்த புகாரின்படி, கெலமங்கலம் போலீசார் பாரதியை விசாரித்தனர்.
போலீசார் கூறியதாவது:
பாரதிக்கும், பக்கத்து வீட்டு சுமித்ராவுக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு, ஓரினச்சேர்க்கையாக மாறியது. பாரதிக்கு, 5 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்த நிலையில், சுமித்ராவுடன் பழகுவதை குறைத்தார்.
இதனால், கவலையுடன் சுமித்ரா காணப்பட்டதால், மனமுடைந்த பாரதி நவ., 4ம் தேதி தன், 5 மாத ஆண் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது, மூக்கையும், வாயையும் அமுக்கி கொன்றார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து, கெலமங்கலம் போலீசார், பாரதி, சுமித்ரா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, ஓரினச் சேர்க்கையால் தான் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.

