/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொல்லப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
/
கொல்லப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
கொல்லப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
கொல்லப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
ADDED : நவ 07, 2025 11:50 PM
கெலமங்கலம்: ஓரின சேர்க்கைக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்யப்பட்ட ஆண் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 38. இவரது மனைவி பாரதி, 26. இவர்களுக்கு, 5, 4 வயதில் இரு பெண் குழந்தைகள் மற்றும் ஐந்து மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது.
பாரதியும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்ரீதர் மகள் சுமித்ரா, 20, என்பவரும், நான்கு ஆண்டுகளாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு, ஐந்து மாத கைக்குழந்தை இடையூறாக இருப்பதாக சுமித்ரா கூறியுள்ளார்.
இதையடுத்து, நவ., 4ம் தேதி மாலை, தன் குழந்தையின் வாய், மூக்கை மூடி, தாய் பாரதி கொடூரமாக கொலை செய்தார். குழந்தை இயற்கையாக இறந்ததாக நினைத்து, அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.
பின்னர் தான், குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சுரேஷ் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, பாரதி, சுமித்ரா ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை முன்னிலையில், நேற்று காலை குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை பிரிவு பேராசிரியர் டாக்டர் தண்டர் ஷிப் தலைமையிலான குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

