/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூருக்கு செப்., 11ல் முதல்வர் வருகை சாலையை செப்பனிடும் பணி மும்முரம்
/
ஓசூருக்கு செப்., 11ல் முதல்வர் வருகை சாலையை செப்பனிடும் பணி மும்முரம்
ஓசூருக்கு செப்., 11ல் முதல்வர் வருகை சாலையை செப்பனிடும் பணி மும்முரம்
ஓசூருக்கு செப்., 11ல் முதல்வர் வருகை சாலையை செப்பனிடும் பணி மும்முரம்
ADDED : செப் 06, 2025 12:58 AM
ஓசூர் :முதல்வர் ஸ்டாலின், ஓசூர் வருகை தரும் நிலையில், மாநில நெடுஞ்சாலத்துறை சாலைகளை வேகம், வேகமாக செப்பனிட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரும், 11, 12ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். ஓசூரில் வரும், 11ம் தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். அதற்காக சென்னையில் இருந்து, தனி விமானம் மூலம், பேலகொண்டப்பள்ளியில் உள்ள, 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' (தால்) நிறுவனத்திற்கு வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஓசூருக்கு முதல்வர் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, பேலகொண்டப்பள்ளியிலிருந்து அந்திவாடி கூட்ரோடு வரையும், அங்கிருந்து மத்திகிரி கூட்ரோடு, தளி ரயில்வே கேட்டிற்கு வரும் சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ரிங்ரோடு, ராயக்கோட்டை சாலை ஆகியவற்றில் குண்டும், குழியுமாக உள்ள இடங்களை, மாநில நெடுஞ்சாலைத்துறை, 20க்கும் மேற்பட்ட பொக்லைன், சாலை போடும் வாகனங்கள் உதவியுடன் செப்பனிட்டு வருகிறது.
குறிப்பாக, ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில், பவானி பேலஸ் திருமண மண்டபம் முதல், தனியார் கூரியர் நிறுவனம் வரை, உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக, ரிங்ரோட்டை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யாமல், மாநில நெடுஞ்சாலைத்துறை விட்டுள்ளது. அந்த பகுதியில், முதல்வர் வருகையால் சாலை பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.
மேலும் சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனுக்கு வண்ணம் பூசுதல், சாலையில் குவிந்துள்ள மண்ணை அகற்றுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதுமட்டுமின்றி, பாகலுார் சாலையின் ஒருபுறம் மட்டும் வரும், 8ம் தேதிக்குள் பணிகளை முடித்து, வாகனங்களை அனுமதிக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.