/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் பாதாள சாக்கடை விரிவாக்கம் ரூ.49.86 கோடி ஒதுக்கியும் துவங்காத பணிகள்

ADDED : நவ 18, 2024 01:54 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில், பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்-திற்கு, நிதி ஒதுக்கியும், பணிகள் தொடரப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம், 33 வார்டுகள் உள்ளன. கடந்த, 2007ல், 40 கோடி ரூபாய் மதிப்பில், 16 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்தது. அதற்கு பின் பாதாள சாக்கடை விரிவாக்க பணிகள் நடக்கவில்லை. நகரின் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய் வெளியேற வழியின்றி கழி-வுநீர் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சேருமிடமான தேவசமுத்திரம் ஏரி அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையமும், முறையாக செயல்படவில்லை. இங்கிருந்துதான் சுத்-திகரிக்கப்பட்ட கழிவுநீர் தேவசமுத்திரம் ஏரியில் கலக்கும்.
மீதமுள்ள, 17 வார்டுகள் மற்றும் விடுபட்ட நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரிவாக்கம் செய்ய, 49.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கி பல மாதங்களாகியும் பணிகள் துவங்கப்படவில்லை. அதற்கான பூஜையை பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு துவக்கி வைப்பதில், போட்டா போட்டி நடப்பதால், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தரப்பில் எந்த தவறும் இல்லை எனவும், கிருஷ்ணகிரி நகராட்சி ஊழியர்கள் சிலர் கூறினர். பொதுமக்களின் அத்தியாவசிய திட்டத்தை சுய-நலம் பார்க்காமல் உடனடியாக துவக்கி வைக்க, கிருஷ்ணகிரி நக-ராட்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.