நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
13 பேருக்கு பணியாணை
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 379 மனுக்களை வழங்கினர். தொடர்ந்து, வேளாண் துறை சார்பில் 4 வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், 9 உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் என, 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், உள்பட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

