sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி

/

தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி

தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி

தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி


ADDED : ஜூலை 18, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியம், பெண்ணேஸ்வர மடம் தென்பெண்ணையாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில் முதற்கட்டமாக, 2 லட்சம் வளர்ந்த பெருரக நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகள் தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டு வருகிறது. கடந்த, 2023ல், 3 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்த்தெடுத்து தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டது. மீன்நுகர்வு அதிகரித்ததால், கூடுதலாக மீன்குஞ்சு வளர்த்து, ஆற்றில் விட மீனவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 2024-ல், 4 லட்சம் மீன்குஞ்சு

கள் ஆற்றில் விடப்பட்டன. நடப்பாண்டில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 2 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ரத்தினம், ஆய்வாளர்கள் கதிர்வேல், கோகிலாமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us