/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழிலாளி மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்
/
தொழிலாளி மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்
ADDED : நவ 04, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குருபராத்தப்பள்ளியை சேர்ந்தவர் பரசுராமன், 56, கூலி தொழிலாளி. கடந்த, 27ம் தேதி இரவு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை குருபராத்தப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே கடக்க முயன்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த பரசுராமன், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை மூளைச்சாவு அடைந்தார். இதனால் உடலுறுப்புகளை, குடும்பத்தினர் தானமாக வழங்கினர். ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.