ADDED : நவ 21, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் மோதி
தொழிலாளி பலி
ஓசூர், நவ. 21-
சூளகிரி அடுத்த முதுகுறுக்கியை சேர்ந்தவர் சோமன்னா, 65. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, பேரிகை - மாஸ்தி சாலையில் நடந்து சென்றார். கே.என்., தொட்டி சாலை சந்திப்பில் உள்ள கோவில் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயமடைந்த சோமன்னா, சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.