ADDED : அக் 29, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்ட கானப்பள்ளி அருகே கேரட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், 55. கூலித்தொழிலாளி. இவர் மனைவி சாந்தம்மா, 50. தம்பதிக்குள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதனால், நாட்றாம் பாளையம் புதுாரிலுள்ள தன் தங்கை வீட்டிற்கு சாந்தம்மா சென்று விட்டார்.கடந்த, 23ம் தேதி மாலை, 5:00 மணிக்கு சந்திரனை, அவரது இளைய மகன் பச்சியப்பா என்பவர் பார்த்து விட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, சாந்தம்மா வீட்டிற்கு வந்தார். வீடு உட்புறமாக பூட்டியிருந்த நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது, உடல் அழுகிய நிலையில் சந்திரன் இறந்து கிடந்தார். உடல்நிலை பாதிப்பால் அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
