நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையம், அண்ணா வீதியை சேர்ந்தவர் மகமூத், 45; சாணை பிடிக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
காலிங்கராயன்பாளையத்தில் ஒரு ஸ்டாண்டில் அவருடைய இரு-சக்கர வாகனம் நேற்று நிறுத்தப்பட்டிருந்ததை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். வாகனத்திலேயே சாவி, செல்போன், பர்ஸ் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சமீராபானு, சித்-தோடு போலீசில் புகாரளித்துள்ளார்.

