/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணையாறு உபரிநீரை வறட்சி பகுதிகளில் திருப்ப பணிகள்
/
தென்பெண்ணையாறு உபரிநீரை வறட்சி பகுதிகளில் திருப்ப பணிகள்
தென்பெண்ணையாறு உபரிநீரை வறட்சி பகுதிகளில் திருப்ப பணிகள்
தென்பெண்ணையாறு உபரிநீரை வறட்சி பகுதிகளில் திருப்ப பணிகள்
ADDED : ஜூன் 01, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரி மற்றும் படேதலாவ் ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் அவர்
கூறியதாவது:
தேவசமுத்திரம் ஏரி, 165 ஏக்கர் பரப்பளவில், 920 மீ., நீளம் கரை பகுதி உள்ளது. இந்த ஏரியில் நீர் வழிந்தோடிகள் 2, மற்றும் 2 மதகு உள்ளது. அக்ரஹாரம் பகுதியில் மழைக்காலங்களில் இடது புறத்திலுள்ள நீர் வழிந்தோடி வழியாக, வெள்ள நீர் மற்றும் உபரிநீர் குடியிருப்புகளில் பகுதிகளில் புகாத வண்ணம், நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல நீர்ப்பிடிப்பு பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு, மாற்றிடம் தேர்வு செய்யப்படும்.
படேதலாவ் ஏரி, 979 ஏக்கர் பரப்பளவில், 1,433 மீ., நீளமும், ஏரியில், 2 நீர் வழிந்தோடிகள், 2 மதகுகள் உள்ளன. இந்த ஏரியிலிருந்து செல்லும் நீட்டிப்பு வாய்க்கால் நீளம், 12.70 கி.மீ., ஆகும். இதன் மூலம், 12 ஏரிகளில் நீர் இருப்பு செய்யப்பட்டு, 840 ஏக்கர் பாசன பரப்பிற்கு நீர் வழங்கப்படுகிறது. மேலும், எண்ணேகொள் அணைக்கட்டின் இடது
புறத்திலிருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணையாற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்கான பிரதான கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர்கள் சையத் ஜஹீருதின், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, பி.டி.ஓ., சிவபிரகாசம், தொழில்நுட்ப உதவியாளர் சங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.