/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மகளிர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்
/
அரசு மகளிர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்
ADDED : ஜூன் 07, 2025 01:04 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் பட்டது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி பங்கேற்றார்.
பள்ளியில், 3,000 மாணவியர், 200 பெற்றோர் மற்றும், 150 ஆசிரியர்களும் இணைந்து, 'சுற்றுச்சூழலை காப்போம்' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின மையக்கருத்தான, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் கழிவுகளை முற்றிலும் தவிர்ப்போம் என்ற கருத்துக்கு ஏற்ப, பள்ளியிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் துணிப்பை வழங்கப்பட்டது. மேலும், மாணவி தேஜஸ்வினி, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமையைக் குறித்து பேசினார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில், வனத்துறை சார்பில், அய்யூர் வனப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பயிற்சி முகாமிற்கு, மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 60 பேரை அழைத்துச்
சென்றனர்.