/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வார விழா
/
தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வார விழா
ADDED : நவ 26, 2025 01:46 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, குன்னத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் துறையில் சார்பில், மரபு வார விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் விமலன் தலைமை வகித்தார்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட தொல்லியல் அலுவலர் வெங்கடகுரு பிரசன்னா பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, குன்னத்துார் அருகிலுள்ள சென்னனுார் அகழ்வாய்வு, அறிவியல் பூர்வமாக அங்கு கிடைத்த பொருட்கள், 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும், சென்னனுார் அகழ்வாய்வு முடிவுகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கினார்.
கட்டுரை போட்டியில் பிரதீபா முதலிடமும், அசல் மரியம்கான், 2ம் இடமும், காந்திமொழி, 3ம் இடமும் பெற்றனர். பண்டைய தமிழ் சமூகம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் ரணிஸ் முதலிடமும், பழனி, 2ம் இடமும், பிரதீப் 3ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் செயலாளர் தமிழ்ச்செல்வன், பெருமாள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

