/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் அறிவியல் மையம் சார்பில் 'உலக மண் தினம்' கொண்டாட்டம்
/
வேளாண் அறிவியல் மையம் சார்பில் 'உலக மண் தினம்' கொண்டாட்டம்
வேளாண் அறிவியல் மையம் சார்பில் 'உலக மண் தினம்' கொண்டாட்டம்
வேளாண் அறிவியல் மையம் சார்பில் 'உலக மண் தினம்' கொண்டாட்டம்
ADDED : டிச 06, 2024 07:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண் துறை இணைந்து, நேற்று 'உலக மண் தினம்' கொண்டாடப்பட்டது. வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், உலக மண் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் மண் வளத்தை பாதுகாக்கும் முறையை எடுத்துரைத்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை வகித்து, விவசாயிகள் இயற்கை உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்களை மண்ணிற்கு அதிகளவில் இடுவதன் மூலம், மண் வளத்தை பாதுகாக்கலாம் என்றார். நிகழ்ச்சியில், 30 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன.
* ஓசூர் வட்டாரம் சித்தனப்பள்ளி கிராமத்தில், வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி, மண் வளத்தை காப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மண் மாதிரி ஆய்வின் படி நிலத்தில் இடுபொருட்கள் பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர் ரேணுகா, உயிர் உரங்களின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நன்மை செய்யும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து, மண் வளம் பாதுகாக்கப்படுகிறது என்றார்.
வேளாண் பொறியாளர் கார்த்திகேயன், வேளாண் பொறியியல் துறையில் செயல்பட்டு வரும் மானியத்திட்டங்கள் பற்றியும், அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கும் வழிமுறைகள், பயன்கள் பற்றியும் விவரித்தார்.