ADDED : பிப் 10, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், உலக ஈரநில நாள் கொண்டாடபட்டது. ஆசிரியர் ஜெயகாந்தி வரவேற்றார். தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் சிந்து, ரம்யா பங்கேற்றனர். விழாவையொட்டி, மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி, வினாடி-வினா ஆகிய நிகழ்ச்சிகளை, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சாந்தி செயல்படுத்தினார்.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்து, விழிப்புணர்வு பேரணி சென்றனர். உதவி தலைமை ஆசிரியர் ரேவதி நன்றி கூறினார்.