ADDED : ஆக 04, 2026 04:31 AM

கிருஷ்ணகிரி; ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலை அம்ம-னுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. திரிசூல அலங்காரத்தில் அம்மன் பக்தர்
களுக்கு அருள் பாலித்தார். புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெரு முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
அதேபோல், ஜக்கப்பன் நகர் ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில், பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபி-ஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடந்தது.
