/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் யாகம்
/
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் யாகம்
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் யாகம்
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் யாகம்
ADDED : மே 29, 2024 07:42 AM
கிருஷ்ணகிரி: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, சிறப்பு யாகம் நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 15ல் துவங்கியது. அன்று முதல், பல்வேறு வாகனங்களில் சுவாமி உலாவும், 20ல் திருக்கல்யாணம், அன்றிரவு கருட வாகனத்திலும், 21ல் நரசிம்ம ஜெயந்தியும், இரவு யானை வாகனத்திலும், நரசிம்மர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, 22 காலை ரதோற்சவமும், 23 காலை அபிஷேகம், பிரகார உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் நகர் வலம், 24 காலை, சூரிய பிரபா வாகனத்தில் நகர் வலம், இரவு சந்திர பிரபா வாகனத்தில் நகர் வலம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, 108 சங்கில் இருந்த பாலை நரசிம்மருக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இரவு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.