ADDED : ஜன 06, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை : ஊத்தங்கரை ரவுண்டானாவில், தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆசிரியர் வீரமணி தலைமை வகித்தார். ஊத்தங்கரை பேரூராட்சி இளநிலை உதவியாளர் சேகர், செண்பக பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேள தாளங்கள் முழங்க பஸ் ஸ்டாண்ட், கல்லாவி ரோடு, அரசமர தெரு, முனியப்பன் கோவில் வழியாக வந்து, பொதுமக்களுக்கு தேசிய பசுமைப்படை பவுன்ராஜ் இலவசமாக மஞ்சள் பை வழங்கினார். பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.